அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவிதான் மகிழ் திருமேனி இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. பாலைவன பகுதியில் காரில் சுற்றுலா செல்லும் ஹீரோவின் கார் பிரேக் டவுன் ஆகிவிட அப்போது அவரின் மனைவி காணாமல் போகிறார். அவர் தன்னுடைய மனைவியைத் தேடிச் செல்லும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளே பிரேக்டவுன் படத்தின் கதை.