வாவ்...அப்போ "வலிமை" படத்தில் இரண்டு அஜித்தா...! சுவாரஸ்ய தகவல் இதோ!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (11:31 IST)
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது. 
அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. மேலும் , நவம்பர் முதல் வாரத்திலே வலிமை படப்பிடிப்பு  டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்கள் திருத்தி அடையும் வகையில் அடிக்கடி அப்டேட்டுகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. கூட ஷூட்டிங் ஸ்டில்ஸ்..அஜித் கெட்டபி உள்ளிட்டவரை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் இரண்டு கெட்டப்பில் நடிக்கவிருப்பது உறுதிசெய்யப்படும் வகையில் அஜித்தின் நியூ லுக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித்  தாடியை முழுவதும் எடுத்துவிட்டு மீசையை இறக்கி விட்டு கொஞ்சம் நடுத்தரமான வயது தோற்றத்தில் தென்படுகிறார். இதற்கு முன் வெளிவந்த புகைப்படத்தில் கட்டான தோற்றத்தால் கருப்பு நிற முடியை வைத்து போலீஸ் கெட்டப்பில் தோற்றமளித்திருந்தார். எனவே இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான தோற்றத்தில்  நடிப்பது உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்