புதிய கெட் அப்பில் அஜித் – வைரலாகும் புகைப்படம் !

வியாழன், 21 நவம்பர் 2019 (09:57 IST)
நடிகர் அஜித் புதிய கெட் அப்பில் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்துக்குப் பிறகு அதேக் கூட்டணியில் ’வலிமை’ (தற்காலிக பெயர் ) படத்தை உருவாக்க உள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்புத் தொடங்கவ்ய்ள்ள நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுதான் வலிமைப் படத்தில் அஜித்தின் கெட் அப் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்