“என் துறையில் இருந்து அரசியலுக்கு செல்பவர்களுக்கு வாழ்த்துகள்..” – அஜித் பதில்!

vinoth

வெள்ளி, 2 மே 2025 (07:35 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பிய அவர் விரைவில் ஊடகங்களை சந்திக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அரசியல் பற்றியக் கேள்வி ஒன்றுக்கு “எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எனது சக நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களின் விருப்பம். ஒரு மாநிலத்தை அல்லது நாட்டை தனது தோளில் சுமக்க முடியுமென நினைப்பது மிகவும் துணிவான செயல். நான் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்