நீதிபதி மகனை நடிகர் தர்ஷன் தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி உத்தரவு என்ன?

Siva

புதன், 30 ஏப்ரல் 2025 (14:44 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகனை நடிகர் தர்ஷன் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன், தர்ஷன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்த நிலையில், தர்ஷன் அந்த காரை எடுக்குமாறு கூறியதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அதன் பின்னர், அடிதடி சண்டையில் முடிந்து, நீதிபதியின் மகன் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தர்ஷன் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், தர்ஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி மகன் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் ஆகிய இரு தரப்பும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, தங்களுடைய மனுவை வாபஸ் பெற்று விட்டதால், இரண்டு வழக்குகளும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்