‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’.. வெற்றிப் பாதைக்குத் திரும்பிய AK

vinoth

புதன், 23 ஏப்ரல் 2025 (07:05 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வேலை நாட்களில் வசூல் குறைந்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இன்னும் பெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த படத்துக்குக் கணிசமான வசூல் இருக்கும் என தெரிகிறது.

உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள இந்த படம் தமிழ்நாட்டில் 140 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் அஜித்தின் முந்தைய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்