அஜித், விஜய் படங்களின் தெலுங்கு உரிமைதான் முதலில் விற்பனையாகும். விஜய் படம் என்றால் கேரள உரிமையும் சுடச்சுட விலைபோகும். முதல்முறையாக அஜித்தின் விவேகம் படத்தின் இந்தி உரிமை சுமார் 8 கோடிகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் சர்வதேச தீவிரவாத பின்னணியில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லனாக இந்தியின் பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் ஸ்பெஷல் 26 உள்ளிட்ட பல இந்திப் படங்களின் மூலம் இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதனால், விவேகத்தின் இந்திப் பதிப்பை பிரமாண்டமாக வெளியிட உள்ளனர்.
சுமார் 8 கோடிகளுக்கு இந்திப் பதிப்பு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.