அஜித்-ன் ’’வலிமை’’ படத்துக்கு 8 மாசமா அப்டேட் இல்லை....ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர் !

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:35 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணிநடிகரான இவர் தற்போதும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் அஜித்-ன் வலிமை படத்திற்கு சமீபத்தில் எந்தவித அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒரு வித்தியாசமான போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், உயர்திரு. போனிகபூர் அவர்களே, கடந்த 8 மாதங்களாக ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தல- 60 வலிமை படத்தின் அப்டேட் காணவில்லை... காத்திருக்கிறோம்… தூங்கா நகரம் அஜித் ஃபேன்ஸ் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்