அமெரிக்க துணை அதிபராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனது டுவிட்டரில் கடந்த 2010ஆம் ஆண்டு டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் அப்போது சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரீஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவரது பணியை பார்த்து தாம் ஆச்சரியம் அடைந்ததாகவும், அவரை பார்த்து தான் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் பதிவு செய்திருந்தார்
இந்த ட்விட்டை தேடி கண்டுபிடித்து தற்போது வைரல் ஆகி வருகின்றனர் நெட்டிசன்கள். பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்த ஒரு டுவீட் தற்போது திடீரென வைரலாகி வருவதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மல்லிகா ஷெராவத் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது