நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் பவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை. இப்படத்திற்கு இதுவரை அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் தினம்தோறும் இயக்குநரிடமும் தயாரிப்பாளர் போனி கபூரிடமும் கேட்டு வருகின்றனர்.
ரசிகர்களை திருப்தின் செய்யும் வகையில் அஜித்குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தரமான இசையை தொடங்கியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இதற்கான அப்டேடுகள் வருவதில் தாமதமாகிறது. ஆனால் விரையில் இப்படத்தின் ஷூட்டிங் வெளியிடவேண்டுமென அஜித்குமார் கடுமையாக உழைத்து வருகிறார். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களுக்குப் பிறகு இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டுமென வலிமை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தற்போது இணையதளத்தில் நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது.
வலிமை பட அப்டேட்டிற்கு பதிலாக இப்புகைப்படம் கிடைத்த மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் வலிமை என்று ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
Ithu vara vantha photo la onne onnu confirm. Thala fitness #Valimai️ la Vera level la iruka pothu