ராகவா லாரன்ஸ் அடுத்த படம் இன்று முதல் படப்பிடிப்பு!

வியாழன், 21 ஜனவரி 2021 (14:11 IST)
ராகவா லாரன்ஸ் அடுத்த படம் இன்று முதல் படப்பிடிப்பு!
ராகவா லாரன்ஸ் இயக்கிய லட்சுமி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
ராகவா லாரன்ஸ் நடிப்பில் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது 
 
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் மற்றொரு முக்கிய வேடத்தில் பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா ஜெயராமன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
 
ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் நடந்து வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று படப்பிடிப்பு தொடங்குவதை அடுத்து பூஜை செய்யப்பட்டது என்பதும் இந்த பூஜையில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், ஜிவி பிரகாஷ், 5 ஸ்டார் கதிரேசன், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்று தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 30 நாட்கள் சென்னையில் நடைபெறும் என்றும் அதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்