அஜித் நாயகி... பட்டியலில் சேர்ந்த காஜல் அகர்வால்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (12:33 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை நாயகி யார் என்பது முடிவாகவில்லை.


 

 
அனுஷ்கா, ரித்திகா சிங் என்று இரண்டு நாயகிகள் படத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும் யார் நாயகி என்பது இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலே உள்ளது.
 
இந்நிலையில், நாயகிக்கான பரிந்துரைப் பட்டியலில் காஜல் அகர்வாலும் இடம்பிடித்துள்ளார். இதுவரை அவர் அஜித் படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்