அஜித்தின் தீவிர ரசிகர் தற்கொலை...ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங்

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (17:12 IST)
நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர் ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இது ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் பிரகாஷ்.  இவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#valimai

குறிப்பாக பிரகாஷ் தன் உடலில் பல இடங்களில்  அஜித்தின் பல திறமைகளையும் அவரது பெயரையும் பச்சை குத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி அவது வீட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு அருகில் விசுவாசம் படத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. அவர் என் தற்கொலை முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை. இந்நிலையில அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #RIPPrakash என்ற ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், தல தான் தனது உலகம் என்று வாழ்ந்து வந்த பிரகாஷின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்