காதலில் விழுந்தார் கீர்த்திசுரேஷ்: இது ஒரு தெய்வீக காதலாம்

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (22:25 IST)
காதல் என்பது காதலனிடம் மட்டுமே வருவது அல்ல, அம்மா, அப்பா, உறவினர்கள், பெரிய தலைவர்கள், மிகப்பெரிய திறமைசாலிகள் ஆகியோரிடத்தில் கொண்டுள்ள அன்புக்கு பெயரும் காதல்தான். அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் மனதை கொள்ளையடித்துள்ளார் நவீன ரவிவர்மா என்று அழைக்கப்படும் ஓவியர் ஸ்ரீதர்



 


கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவரின் படங்களையும் வரைந்து அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ள ஸ்ரீதர் தற்போது வரைந்தது பல இளைஞர்களின் கனவுக்கன்னியான கீர்த்திசுரேஷ்.

ஸ்ரீதர் வரைந்த ஓவியத்தை பார்த்து அசந்துபோய் மனதை அந்த ஓவியத்திடம் பறிகொடுத்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். இது ஒரு தெய்வீக காதலுக்கு இணையானது என்று கீர்த்தி சுரேஷ் தரப்பு கூறுகின்றது.

மேலும் இன்று ஸ்ரீதர் வெளிநாடுகளில் மட்டுமே உள்ள சிலிக்கான் மியூசியத்தை திறந்துள்ளார். இந்த மியூசியத்தில் ஸ்ரீதர். அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் உள்பட பல பிரபலங்களின் சிலிக்கான் சிலைகள் உள்ளன. இந்த மியூசியத்தை பலமணி நேரம் தன்னை மறந்து கீர்த்தி சுரேஷ் பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்