கேஜிஎஃப் ’அதிரா’ கெட்டப்பில் அஜித்? வைரலாகும் fanmade போஸ்டர்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (09:07 IST)
கேஜிஎஃப் 2 படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற முரட்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும்m மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் அதிரா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல காட்டப்பட்ட நிலையில் ஒரு டிவிஸ்ட் மூலமாக அவரை மீண்டும் கொண்டு வந்து கேஜிஎஃப்-ஐ கைப்பற்ற முயற்சி நடக்கிறது. அதில் சஞ்சய் தத் தனது சிறப்பான நடிப்பால் அதிரா கதாபாத்திரத்தை ரசிகர்களை மிரட்டும் ஒன்றாக மாற்றினார். இந்நிலையில் ‘அதிரா’ கெட்டப்பில் சஞ்சய் தத்துக்குப் பதிலாக அஜித்தை வைத்து ரசிகர்கள் fan made போஸ்டரை பகிர இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்