சன் பிக்சர்ஸோடு கூட்டணி… மீண்டும் இணைகின்றனரா சிறுத்தை சிவா & அஜித்!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:18 IST)
அஜித் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கும் அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சிறுத்தை சிவா பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்