அஜித் தான் AK. கருணாகரன் ஆப்ஸ். விறுவிறுப்பில் விவேகம்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (22:41 IST)
தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டுமின்றி போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் 'விவேகம்' படத்தில் அஜித் 'AK' என்ற கேரக்டரில் நடித்து வருகிறாராம். AK என்றால் அஜித் குமார் என்றும் அஜித் முதன்முதலாக தனது சொந்த பெயரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்த படத்தில் கருணாகரன் வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்து வருவதாகவும் அவரது கேரக்டரின் பெயர் 'ஆப்ஸ்' என்றும் கூறப்படுகிறது.
 
அஜித் மற்றும் கருணாகரன் இருவரும் சேர்ந்து முதல் பாதியில் செம கலகலப்பான காமெடி செய்வதாகவும், இரண்டாம் பாதியிலும் கருணாகரனுக்கு நடிக்க நல்ல ஸ்கோப்பை சிவா கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்