இதற்குத்தானா ஸ்டிரைக் பண்ணிணிங்க பாலகுமாரா! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (22:20 IST)
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை எதிர்த்து தான் தியேட்டர் அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்க, இன்றைய பேச்சுவார்த்தையின்போது உண்மையில் அவர்கள் எதற்காக ஸ்டிரைக் செய்தனர் என்ற உண்மை வெளியே வந்துவிட்டதாம்.



 
 
கேளிக்கை வரியை நீக்கவோ, குறைக்கவோ தமிழக அரசு முன்வராத நிலையில் கடைசியில் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது நிஜ முகத்தை காட்டிவிட்டார்கள். 
 
இரண்டு வரிகளையும் நாங்கள் கட்டத்தயார். ஆனால் தியேட்டர் கட்டணத்தை ரூ.200ஆக அதிகரிக்க வேண்டும் என்பதுதான் கடைசியில் அவர்களது கோரிக்கையாக இருந்ததாம். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத தமிழக அரசு இப்போதைக்கு ஜிஎஸ்டி வரிக்கு தேவையான தொகையை மட்டும் கட்டணத்தில் அதிகரிக்க ஒப்புக்கொண்டதாம். 
 
எனவே நாளை முதல் சினிமா டிக்கெட் 120+33 என மொத்தம் ரூ.153 என நிர்ணயம் செய்யப்படவுள்ளதாம். மக்களின் தலையில் மிளகாய் அரைக்கத்தான் இத்தனை நாள் ஸ்டிரைக்கா? என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்