அஜித் மீது ’உயர்ந்த மரியாதை’...எனது ’ஃபேவரெட் படம்’ இதுதான் ... இயக்குநர் அட்லி டுவீட்

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (20:51 IST)
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்து ஒருவாரம் ஆகிவிட்ட போதிலும் இந்த படத்தின் ஒரிஜினல் காப்பியை இன்று காலை தான் தயாரிப்பாளரிடம் அட்லி ஒப்படைத்தார். நேற்று இரவு வரை அவர் பிகில் படத்தை மெருகேற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை முதல் அட்லி தனது டுவிட்டரில் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம், நயன்தாராவின் கேரக்டர், ஏ.ஆர்.ரஹ்மான் கூடுதலாக போட்டுக்கொடுத்த இரண்டு பாடல்கள், அஜித் குறித்த தனது கருத்து என சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துக்கொண்டிருந்தார்.
 
அப்போது அஸ்வின் என்பவர் , அஜித் குறித்து ஒருவார்த்தையில் சொல்லுங்கள் என டுவீட் செய்து அட்லியிடம் கேட்டார்.
அதற்கு அட்லி, நான் அஜித் சாரின் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன். எனது சமீபத்திய ஃபேவரைட் மடம் 'விஸ்வாசம்' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' என ரீ டுவீட் செய்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்