இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.