அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் ரிவ்யூஸ் சூழ்ந்திருக்க, அஜித் மற்றொரு கார் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற பந்தயத்தில் அவரது 'Ajith Kumar Racing Team' மூன்றாம் இடம் பிடித்தது. தொடர்ந்து இத்தாலியிலும் அதே இடத்தை கைப்பற்றியிருக்கிறார். இப்போது அடுத்த இலக்கு GT4 European Series என்றும் இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்க அஜித் கார் ரேஸ் அணி தீவிர முயற்சி எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய போட்டிக்காக கார் செட்டிங்கில் அஜித் ஈடுபடுவதை காட்டும் வீடியோ, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட உள்ளதால் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக கால தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.