இதெல்லாம் ஒரு செண்ட்டிமெண்ட்டா ? – அஜித் ரசிகர்கள் அலப்பறை

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (07:46 IST)
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படம் சென்சாரில் யூ சர்ட்டிபிகேட்  பெற்றுள்ளது. இதனை முன்னிட்டௌ அஜித் ரசிகர்கள் புது செண்ட்டிமெண்ட் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.

அஜித்- சிவா காம்போவில் இதுவரை வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகியப் படங்கள் வெளியாகியுள்ளன. நான்காவது படமாக விஸ்வாசம் தயாராகி பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கிறது. அஜித், சிவா இருவருமே கடவுள் நம்பிக்கை மற்றும் செண்ட்டிமெண்ட் விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள்.

இவர்கள் காம்போவில் உருவானப் படங்கள் அனைத்தும் ஆங்கில எழுத்தான v-ல் ஆரம்பித்து m-ல் முடியும் படி வருமாறுப் பார்த்துக் கொள்கின்றனர். அதேப் போல மூன்று படங்களின் அப்டேட்களும் சாய்பாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். மூன்றுப் படங்களும் வியாழக்கிழமைகளில் மட்டுமே வெளியானது. விஸ்வாசம் படமும் ஜனவரி 10 வியாழக்கிழமையிலேயே வெளியாக இருக்கிறது.

இந்த செண்ட்டிமெண்ட்கள் ஒருபுறம் இருக்க இப்போது இன்று ஒரு புதிய செண்ட்டிமெண்ட்டை அஜித் ரசிகர்கள் உருவாக்கிப் பரப்பி வருகின்றனர். அது என்னவென்றால் இன்று விஸ்வாசம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு அனைவரும் பார்க்க அனுமதி அளிக்கும் யு சர்ட்டிபிகேட் வாங்கியுள்ளது. ஏற்கனவே அஜித்- சிவா காம்போவில் வெளியான வீரம், வேதாளம் ஆகியப் படங்களும் யூ சர்ட்டிபிகேட் வாங்கியப் படங்கள்தான். அவையிரண்டும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் யூ/ஏ சர்ட்டிபிகேட்டுடன் வெளியான விவேகம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதனால் யூ சர்ட்டிபிகேட் பெற்றுள்ள விஸ்வாசம், வீரம் மற்றும் வேதாளம் போல மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்