அஜித் மகள் அனோஷ்கா பிறந்த நாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (08:46 IST)
anoshka
தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை படக்குழுவினர்கள் கடந்த ஒரு வருடமாக தராமல் இருந்தாலும் அஜித் குறித்து ஏதாவது ஒரு செய்தி தினமும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையாக உள்ளது
 
‘வலிமை’ படத்தின் எந்த போஸ்டரையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் தினசரி ஃபேன்மேட் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று தல அஜித்தின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை அடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
அதுமட்டுமன்றி #HBDAnoushkaAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரமுகர்களும் அஜித் மகள் அனோஷ்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்