இன்னும் பல விருது தா…விருதுகள் மேலும் உத்வேகமளிக்கிறது – பார்த்திபன் டுவீட்

சனி, 2 ஜனவரி 2021 (10:29 IST)
2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும், பன்முகத்தன்மைகொண்ட நடிகருக்கான விருது அஜித்திற்கும்  வழங்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னும் விருதுகள் தான் எனப் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுகின்றவர்களின் உழைப்பு என்பது போற்றத்தக்கது. அந்தவகையில், அவர்களின் உழைப்பை அங்கீகரித்து,மக்களாலும், அரசாலும், அத்துறையைச் சார்ந்தவர்களாலும் வழங்கப்படும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட அவர்களுக்கு உறசாகத்தை வரவழைக்கும்.

அந்த வகையில், சினிமாத்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,

சிறந்த திரைப்படமாக செழியனின் டூலெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  சிறந்த நடிகர் விருது அசுரன் படத்தின் நடித்ததற்காக நடிகர்  தனுஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்தில் நடித்ததற்காக ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்த நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ராக் ஸ்டார் அனிருத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். பன்முகத்திறமை கொண்ட நடிகரான நடிகர் அஜித்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், தா! தா! சாதிக்க இன்னும் பல விருது தா! எனக்கு மட்டுமல்ல இத்தக் கோரிக்கை சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய அதன் உயரமும் கூடுவதால் , அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் மேலும் உத்வேகமளிக்கிறது நன்றி தாதா சாஹிப் பால்கே விருது குழுவுக்கு instagram.com/p/CJeNICZrtzb/ எனப் பதிவிட்டுள்ளார்.
எண்பதுகளில் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகி, பின் தனது முயற்சி உழைப்பால் நடிகர்,இயக்குநராக வெற்றி பெற்று, இன்றளவில் படமியக்கி அதில் விருதும் பெருவதுடன் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருப்பது நடிகர் பார்த்திபன் தான். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தா! தா! சாதிக்க இன்னும் பல விருது தா!
எனக்கு மட்டுமல்ல இத்தக் கோரிக்கை
சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய அதன் உயரமும் கூடுவதால் , அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் மேலும் உத்வேகமளிக்கிறது
நன்றி
தாதா சாஹிப் பால்கே விருது குழுவுக்குhttps://t.co/4gQ5V5uRZ9 pic.twitter.com/wSNIyk1q8C

— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 2, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்