சென்னை நகர பாதுகாப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு...

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (14:57 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பணிக்காக அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா குழு களமிறங்க உள்ளது.

 
சென்னையில் மிகப்பிரபலமான ஜவுளிக்கடை, நகைக் கடைகள் தியாகராய நகரில் உள்ளன. இங்கு எப்போதுமே  மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஆர்-1 காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளின் முகத்தை எளிதில் கண்டுகொள்ளும் வகையில் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ட்ரோன் எனப்படும் பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
 
இந்த பாதுகாப்பு பணிக்காக அஜித்தின் தக்‌ஷா குழுவினர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்