இந்நிலையில், அசல் போஸ்டரில் சில குளறுபடிகள் நடந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, அந்த போஸ்டரில் இடது ஓரத்தில் உள்ள முதல் நபரை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அஜித்தின் அருகில் ஒட்ட வைத்துள்ளனர். தெரியக்கூடாது என்பதற்காக அவரின் சட்டை கலரை மட்டும் மாற்றிவிட்டனர். இதில் பரிதாபம் என்னவெனில், அந்த நபருக்கு அருகே ஒருவர் கை தட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் கையையும் சேர்த்து காப்பி செய்து அஜீத்தின் அருகில் பேஸ்ட் செய்துள்ளனர்.
அஜீத் போல் மாஸ் ஹீரோ நடித்துள்ள படம் தொடர்பான போஸ்டரில் அதிக ஆட்களை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா செய்வது எனவும், காப்பி பேஸ்ட் செய்யும் போது ஒழுங்காக செய்ய வேண்டாமா என கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.