மூன்றே நாளில் வலிமை டப்பிங்கை முடித்த அஜித்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:11 IST)
நடிகர் அஜித் வலிமை படத்தில் தனது டப்பிங் பணிகளை மூன்றே நாளில் முடித்துள்ளார்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு இந்த ஆண்டுக்குள்ளேயே இந்த படத்தை ரிலிஸ் செய்ய படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை அஜித் மூன்றே நாளில் முடித்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்