இளமைத் தோற்றத்தில் அஜித்… வெளியானது விடாமுயற்சி மூன்றாவது போஸ்டர்!

vinoth
வெள்ளி, 19 ஜூலை 2024 (17:12 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர், அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் இளமையான தோற்றத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்