அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?... கசிந்த தகவல்!

vinoth
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:22 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி தற்போது ஸ்ரீலீலாவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீலீலா குண்டூர் காரம் மற்றும் பகவந்த் கேசரி ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்