டிவிட்டரில் ‘அஜித் 62 இயக்குனர்’ டேக்கை நீக்கிய விக்னேஷ் சிவன்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (09:30 IST)
அஜித் 62 படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்ட விக்னேஷ் சிவன் இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இப்போது ட்விட்டரில் தன்னுடைய பயோவில் “அஜித் 62 இயக்குனர்” என்ற டேக்கை நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்