கங்குலி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குகிறாரா ரஜினியின் மகள்?

செவ்வாய், 24 மே 2022 (17:56 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
நேற்று கொல்கத்தாவில் கங்குலியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாகவும் இது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இன்று நடைபெறும் பிளே ஆப் போட்டியை தனது மகன்களுடன் கண்டு ரசிக்க இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் கங்குலி படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது 
 
ஏற்கனவே பாலிவுட்டில்  'ஓ சாதிசால்’  என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்