ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனி, 6 மே 2023 (07:00 IST)
தமிழ்சினிமாவில், காக்காமுட்டை, ரம்மி, கனா, கபெ ரணசிங்கம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்த ரன் பேபி ரன் படம் வெளியானது.

இந்த நிலையில், லாக்கப் படத்தை இயக்கிய எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள படம் சொப்பன் சுந்தரி. இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இவருடன் இணைந்து, தீபா சங்கர்,கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இப்போது ஓடிடியில் இந்த படம் வரும் மே 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்