தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் , என். ஜி. கே உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில், நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய அவர்,பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதுகுறித்து, இன்று தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவவன், புஷ்பா பிரபலம் சுனிலுடன் திரையைப் பகிர்ந்துகொள்வதில், மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.