சீயான் விக்ரம் படத்தின் 2வது நாயகி ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (06:33 IST)
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டு வரும் நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் பார்த்திபன் மற்றும் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர்.




 



இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய கேரக்டர் விக்ரமுக்கு ஜோடி இல்லையென்றாலும் கதையின் திருப்பத்திற்கு உரிய கேரக்டர் என்று கூறப்படுகிறது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், ஜான், துருவ், மற்றும் ஜோஸ்வா என்ற மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
அடுத்த கட்டுரையில்