முதல்முறையாக 100 நாட்களுக்கு முன்பே டிரெண்ட் ஆன விஜய் பிறந்த நாள்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (01:09 IST)
இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்பு தேவையானதை வாங்கி கொடுப்பது, முதியோர்களுக்கு விருந்தளிப்பது உள்பட பல்வேறு சமூக நலன்கள் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும்


 


இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு இன்னும் சரியாக 100 நாட்கள் இருக்கும் நிலையில் டுவிட்டரில்  100DAYS FOR VIJAY BIRTHDAY என்று ஒரு ஹேஷ்டேக் தொடங்கப்பட்டு அது தற்போது இந்திய அளவில் டிரெண்டிலும் உள்ளது.

ஒரு நடிகரின் பிறந்த நாள் நிகழ்ச்சி என்பது 100 நாட்களுக்கு முன்பே அவரது ரசிகர்களிடம் டிரெண்ட் ஆவது இதுவே முதல்முறை. விஜய்க்கு முன்னரே அஜித்தின் பிறந்த நாள் வருகிறது. அதாவது மே 1ஆம் தேதி. ஆனால் அஜித் ரசிகர்கள் இன்னும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கவே இல்லாத நிலையில் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்