ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:12 IST)
மலையாளத்தில் நிமிஷ ஜெயன் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியானது. மலையாளத்தில் வைக்கப்பட்டு இருந்த அதே பெயரை தமிழுக்கும் வைத்திருந்தனர். ஆனால் போஸ்டர் ‘தீ கிரேட் இந்தியன் கிச்சன்’ என்று தவறாக எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர்கள் அந்த தவறு சரி செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்