ஒமிக்ரான் தொற்று பரவலில் டெல்லி முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.