”வாலாஜாபாத் to ECR… செம்ம த்ரில்லர் ரைட்..” ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா டிரைலர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (10:08 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் காரின் முன் டீ  குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது 

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இதையடுத்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா நடிக்க, வாலாஜாபாத்தில் இருந்து ECR செல்லும் ஒரு ரைடில் போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விறுவிறுப்பாக டிரைலரில் காட்சி படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்