சிறிய படங்களை ஊக்குவிக்க ஏஜிஎஸ் திரையரங்கில் புதிய முயற்சி!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (10:37 IST)
இன்று வெளியாகும் தேன் திரைப்படத்தின் டிக்கெட் விலையை ஏஜிஎஸ் நிறுவனம் குறைத்து விற்க முடிவு செய்துள்ளதாம்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்துக்கு மட்டுமே எதிர்பார்த்த அளவிலான கூட்டம் வந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் வெளியான எந்த படங்களுக்கும் சொல்லிக்கொள்ளும் படியான கூட்டம் இல்லை. இதனால் எப்படியாவது ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் திரையுலகினரும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியாகும் தேன் படத்தின் டிக்கெட் விலையை குறைத்து விற்பனை செய்ய ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது சம்மந்தமாக திரைப்பட இயக்குனரும், சினிமா வியாபாரம் தொடர்பான புத்தகங்களை எழுதியவருமான கேபிள் சங்கர் தனது முகநூல் பக்கத்தில் ‘கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு வெளியாகும் “தேன்” என்கிற சிறு படத்தை வெளியிடும், AGS Cinemas தங்களது அனைத்து அரங்குகளிலும், அப்படத்திற்கு டிக்கெட் விலையை 100 ரூபாயாய் நிர்ணையித்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தங்களது உணவு பொருட்களின் விலையை 50 சதவிகிதம் கழிவுடன் தருகிறார்கள். நல்ல முயற்சி. ஏஜிஎஸ் சினிமாவின் இம்முயற்சி நல்ல சிறுபடத்திற்கு உதவியாய் இருக்கட்டும். தமிழ் சினிமாவுக்கும் சேர்த்து சொல்கிறேன்.’ என எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்