மீண்டும் பேய்ப் படத்தில் நயன்தாரா?

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:03 IST)
‘மாயா’, ‘டோரா’ படங்களைத் தொடர்ந்து மறுபடியும் பேய்ப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்கிறார்கள். 
புரோசித் ராய் இயக்கத்தில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. அனுஷ்கா சர்மா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம், சூப்பர் நேச்சுரல் ஹாரர்  வகையைச் சார்ந்தது. இந்தப் படத்தை அனுஷ்கா சர்மாவே தயாரித்துள்ளார். 18 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை 40 கோடி  ரூபாய்க்கும் மேல் தயாரித்துள்ளது.
 
இந்தப் படம், விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹீரோயினாக முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்த நடிகை  நயன்தாரா என்கிறார்கள். ஏற்கெனவே ‘மாயா’, ‘டோரா’ என பேய்ப் படங்களில் நடித்துள்ள நயன், இந்தப் படத்திலும் நடிக்க ஓகே சொல்வார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்