பூஜா ஹெக்டேவை அடுத்து அபர்ணாதாஸ்: முடியப்போகிறதா ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு?

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (17:56 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் பூஜாவின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அவர் இன்று காலை வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்
 
இந்த வீடியோ சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூஜாவை அடுத்து அபர்ணா தாஸ் தன்னுடைய பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்
 
மேலும் அவர் தான் சென்னையை விட்டு கிளம்புவதாகவும் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் இரண்டு நாயகிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்