அப்பாவை இழந்த பின்… கனவை நனவாக்க உழைப்பேன் -.பிரபல நடிகர் உறுதி…

Webdunia
வியாழன், 20 மே 2021 (19:39 IST)
கடந்தாண்டு கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வசந்த் அண்ட் கோ நிருவனரும், கன்னியாகுமரி எம்பியுமான ஹெச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, இவர் வெற்றி பெற்ற எம்பியான அதே கன்னியாகுமரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் வெற்றி பெற்று எம்பியானார்.

இந்நிலையில், இவர் தன பிறந்தநாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவை இழந்த பின் கடந்து வரும் முதல் பிறந்தநாள். அவர் எப்போதும் வழங்கும் அறிவுரைகளையும் அவரது வாழ்த்துக்களையும் இன்று நினைவுகூர்கிறேன். எப்போதும் நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள். உங்கள் கனவுகளை நனவாக்க உழைப்பேன் என்று இந்நாளில் உறுதி கொள்கிறேன எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்துவருகிறது.


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்