நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (10:42 IST)
எழுத்தாளர் மீரா கதிரவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு “விழித்திரு” என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து  அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். 

 
விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு. சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்ட நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது  வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சுவாரஸ்யம் நிறைந்துள்ள இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்று  கூறுயுள்ளார் இயக்குனர் மீரா கதிரவன். இதற்கு முன் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்