பிரதமர் சீமான்.. முதல்வர் விஜயகாந்த்.. அடடே! – ”அடியே” மொஷன் போஸ்டர்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (19:40 IST)
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “அடியே” படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். காதல் படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு படி மேலே சென்று மல்டிவெர்ஸ் காதல் கதையில் நடித்துள்ளார். தமிழில் திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

அடியே என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மல்டிவெர்ச கான்செப்ட் என்பதால் பல நூதனமான காட்சிகளை மோஷன் போஸ்டரில் இணைத்துள்ளனர். இலங்கை பிரதமராக சீமான் இருப்பது போலவும், தமிழக முதல்வராக விஜயகாந்த் இருப்பது போலவும், விஜய் - கவுதம் மேனன் கூட்டணியில் யோகன் அத்தியாயம் ஒன்று வெளியாகி இருப்பது போலவும் சில காட்சிகளை இந்த மோஷன் போஸ்டர் கொண்டிருக்கிறது.

அது போல சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக மன்சூர் அலிகான் எந்திரன் படத்தில் நடித்திருப்பது போலவும் காட்டப்படுகிறது. இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்