உங்களுக்கு அது ஏன் வெள்ளையா இருக்கு? பத்திரிகையாளரின் மூக்கை உடைத்த ஜெயம் ரவி!

புதன், 26 ஏப்ரல் 2023 (19:38 IST)
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்து வருகிறார். 
 
இப்படத்தின் ப்ரோமோஷனில் படு பிசியாக இருந்து வரும் ஜெயம் ரவியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், உங்கள் தலை முடி வெள்ளையாக இருக்கிறதை பற்றி சொல்லுங்கள் கேட்டுள்ளார். அவருக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, என் முடி வெள்ளையாக இருப்பது போன்று உங்கள் முடியும் வெள்ளையாக இருக்கிறது என்று காமெடியாக பதிலளித்து அங்கிருந்த  நடிகர் நடிகைகளை சிரிக்க வைத்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்