சனாதன சேவைக்காகவே ‘ஆதிபுருஷ்’ படத்தை உருவாக்கினோம்: வசனகர்த்தா விளக்கம்

செவ்வாய், 20 ஜூன் 2023 (09:30 IST)
சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாசுர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சனாதன சேவைக்காகவே இந்த படத்தை உருவாக்கினோம் என்று தெரிவித்துள்ளார். 
 
எதிர்மறையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருவது குறித்து அவர் கூறிய போது ’ராமாயணத்திலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதுதான். சரியோ தவறோ. காலம் மாறும் ஆனால் உணர்வுகள் மட்டும் நிலைத்திருக்கும். 
 
இந்த படத்திற்காக 4000 வரிகள் நான் வசனம் எழுதியுள்ளேன். ஆனால் சில வரிகள் சிலரது உணர்வுகளை புண்படுத்தி விட்டன. நூற்றுக்கணக்கான வரிகளில் ஸ்ரீ ராமரை போற்றி இருந்தேன், சீதையின் கற்பை போற்றி இருந்தேன், அவற்றுக்கு பாராட்டு கிடைத்திருக்க வேண்டும் ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்