தியேட்டர்லாம் ஈயாடுது… ஆனா மூனு நாள் வசூல் 340 கோடியாம்… ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு!

செவ்வாய், 20 ஜூன் 2023 (08:23 IST)
பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டும் ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும் படம் முதல் நாளில் 140 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இரண்டாம் நாளில் இருந்து இந்த படத்துக்கு மேலும் கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் படக்குழு அறிவிக்கும் வசூல் மட்டும் இன்னும் குறையவில்லை.

இரண்டாம் நாளிலும் 100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் மூன்றாம் நாளிலும் 100 கோடி ரூபாய் வசூலித்து 3 நாளில் மொத்தம் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்