ஆதிபுரூஸ் படத்திற்கு நேபாளத்தில் எதிர்ப்பு…

திங்கள், 19 ஜூன் 2023 (21:54 IST)
இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக   சமீபத்தில் இப்படம்  வெளியான நிலையில்,  வெளியான 3 நாட்களில்  உலகம் முழுவதும் ரூ.349 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலீட்டியுள்ளது.

இந்த நிலையில்,  இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.  பல இடங்களில் தியேட்டர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேபாள நாட்டிலும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டுமென்று  போராட்டம்  நடைபெற்று வருகிறது.

எனவே, தலைநகர் காத்மாண்டுவிலும், சுற்றுலா தலமான பொகாராவிலும் இத்திரைப்படத்திற்கு வலுத்துள்ள எதிர்ப்பினால், அனைத்து  இந்திப் படங்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், அங்குள்ள 17 தியேட்டர்களின் வாசலில் போலீஸார் நிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்