சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்