இயக்குனர் ஆன பிரபல நடிகை திஷா பட்டாணி!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:13 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக ஒரு இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். கியூன் கரு ஃபிக்கர்- கேர்ஸ் ஆன்தம் 23 என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளதோடு அதை இயக்கியும் உள்ளார். இந்த ஆல்பத்தின் டீசர் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்